காதல், காதல், காதல்,காதல் போயின் காதல் போயின்,சாதல் சாதல் சாதல் சாதல் சாதல் என்ற பாரதி "காதல் செய்வீர் உலகத்தீரே" என்றார்

என் மனம் கவர்ந்தவளுக்காக

Wednesday, September 15, 2010

காதல்கதை- ஸ்ரீ

காதல்கதை- ஸ்ரீ   (பகுதி-2)

ஸ்ரீ - இது ‌ஒரு நவீன யுகத்தின் மாறுபட்ட மன போராட்ட கதை

பகுதி -1 ன் கதை சுருக்கம்

நவீன யுகத்தில் முகம் தெரியாத இரு உள்ளங்களுக்குள் ஏற்பட்ட காதல் அனுபவ கதை.
‌செல்பேசிமூலம் அறிமுகம் இல்லாத ‌ஒரு பெண்ணின் எண்ணிலிருந்து வந்த ஒரு குறுச்செய்தி (SMS) தான் இவர்களின் அறிமுகம்.  அதன் பின்னர் கதையின் நாயகன் ஆனந்த், ஸ்ரீ (அவள் பெயர்)க்கு தனது காதல் மற்றும் அவனுடைய எண்ணத்தை கடிதம் மூலம்  தெரிவிக்கி‌றான்.  
அவனுடைய கடிதத்திற்கு அவளிடமிருந்து பதில் கடிதம் (பகுதி-2)

அன்புள்ள ஆனந்த், 

நான் உன் கடிதத்தை படிச்சேன், அழுதுட்டேன்,  என்னால் control பன்ன முடியாத அளவுக்கு நான் அழுதுட்டேன்.

நான் உன்னை பார்த்ததில்லை, நீயும் என்னை பார்த்ததில்லை, பின்ன எப்படி  காதலிக்க முடியும்,  

நீ எனக்கு நல்ல Friend, உன்னை விரும்புகிறேன், உன் நட்பை விரும்புகிறேன்.  ஆனால் காதலிக்கவில்லை.

நான் என் கூட படிச்சவனை, காதலிக்கிறேன், அவனையே கல்யாணம் செய்ஞ்சுக்கபோறேன். இதை உன்னிடம்   சொல்ல நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்  தெரியுமா?


 உன்னை காதலிக்கவோ, கல்யாணம் பன்னிக்கவோனு எனக்கு தோனலை!!!!!!!

உன் மனசுல ஆசை வளர நான் காரணமாகிடேன், அதற்கு எந்த தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன்.
நான் ஏன் உன்னிடம் அப்படி நடந்துக் கொண்டேனு தெரியல, நான் செய்தது தப்பு தான்,  
மன்னிச்சிடு.......... மன்னிச்சிடு........... மன்னிப்பு கேட்கறத தவிர வேறு எதுவும் என்னால சொல்ல முடியாது.

என்னால உன்கிட்ட  இனி பேச முடியாது,
இனிமே என்னை ‌Disturb பன்னாத ப்ளீ‌ஸ்,
Thanks, bye

Ur friend