காதல், காதல், காதல்,காதல் போயின் காதல் போயின்,சாதல் சாதல் சாதல் சாதல் சாதல் என்ற பாரதி "காதல் செய்வீர் உலகத்தீரே" என்றார்

என் மனம் கவர்ந்தவளுக்காக

Saturday, November 6, 2010

தீபாவளி வாழ்த்துக்கள்

தீபாவளி வாழ்த்துக்கள்

தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லுவாய் என
காத்திருந்தேன் செல்போனும் கையுமாக
ஏமாற்றம்,

அட்லிட்ஸ் ஒரு மெஜ் அனுப்புவனு பார்த்தேன்,
அதுவும் இல்லை.....

எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்க
நான் மட்டும் சோகமாக இருந்தேன்
உன்ன நினைச்சிகிட்டு


எல்லாரும் பட்டாசு வெடிச்சாங்க
நீ
என் இதயத்‌தில் பட்டாசு வெடிச்ச,
உன் நினைவுகளுடன் நானும் கொண்டாடினேன்
தலை(வலி)தீபாவளி.

உன் வாழ்க்கையில் நீ மகிழ்ச்சியா இருக்க என் தீபாவளி வாழ்த்துக்கள்

ஸ்ரீ--------மனம் விட்டு பேச விரும்புகிறேன்

Hai Dear, எப்படி இருக்கே,

அம்மா, அப்பா,  எல்லாரும் நல்லா இருக்காங்களா?

உன்
friends நல்லா இருக்காங்களா?

என்ன miss பன்ன மாதிரி,
எந்த friends யும் miss பன்னிடாதே?

இனி உன்ன பார்க்கவும், பேசவும் ச‌ந்தர்ப்ம் கிடைக்காதுனு நினைக்கேறன்,




 
என் friendship ஏதோ ஒரு reason க்காக உனக்கு என்ன பிடிக்கலைனு மட்டும் புரி‌யுது. 



இதெல்லாம் சொல்லி உன்ன கஷ்டபடுத்தனும்னு நான் விரும்பல,
ஆனா, இவ்வளவு நாள் பழகிட்டு 
எதுவும் சொல்லிகாம போறது எனக்கு பிடிக்கலை,

நான் எப்பவும் உன்னை நினைச்சிகிட்டே இருப்பேன்,
உன்கிட்ட தினமும் நான் பேசிட்டே தான் இருக்கிறேன்,  உன் Photo வை பார்த்து.............
By(e)
ur sweet

Wednesday, September 15, 2010

காதல்கதை- ஸ்ரீ

காதல்கதை- ஸ்ரீ   (பகுதி-2)

ஸ்ரீ - இது ‌ஒரு நவீன யுகத்தின் மாறுபட்ட மன போராட்ட கதை

பகுதி -1 ன் கதை சுருக்கம்

நவீன யுகத்தில் முகம் தெரியாத இரு உள்ளங்களுக்குள் ஏற்பட்ட காதல் அனுபவ கதை.
‌செல்பேசிமூலம் அறிமுகம் இல்லாத ‌ஒரு பெண்ணின் எண்ணிலிருந்து வந்த ஒரு குறுச்செய்தி (SMS) தான் இவர்களின் அறிமுகம்.  அதன் பின்னர் கதையின் நாயகன் ஆனந்த், ஸ்ரீ (அவள் பெயர்)க்கு தனது காதல் மற்றும் அவனுடைய எண்ணத்தை கடிதம் மூலம்  தெரிவிக்கி‌றான்.  
அவனுடைய கடிதத்திற்கு அவளிடமிருந்து பதில் கடிதம் (பகுதி-2)

அன்புள்ள ஆனந்த், 

நான் உன் கடிதத்தை படிச்சேன், அழுதுட்டேன்,  என்னால் control பன்ன முடியாத அளவுக்கு நான் அழுதுட்டேன்.

நான் உன்னை பார்த்ததில்லை, நீயும் என்னை பார்த்ததில்லை, பின்ன எப்படி  காதலிக்க முடியும்,  

நீ எனக்கு நல்ல Friend, உன்னை விரும்புகிறேன், உன் நட்பை விரும்புகிறேன்.  ஆனால் காதலிக்கவில்லை.

நான் என் கூட படிச்சவனை, காதலிக்கிறேன், அவனையே கல்யாணம் செய்ஞ்சுக்கபோறேன். இதை உன்னிடம்   சொல்ல நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்  தெரியுமா?


 உன்னை காதலிக்கவோ, கல்யாணம் பன்னிக்கவோனு எனக்கு தோனலை!!!!!!!

உன் மனசுல ஆசை வளர நான் காரணமாகிடேன், அதற்கு எந்த தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன்.
நான் ஏன் உன்னிடம் அப்படி நடந்துக் கொண்டேனு தெரியல, நான் செய்தது தப்பு தான்,  
மன்னிச்சிடு.......... மன்னிச்சிடு........... மன்னிப்பு கேட்கறத தவிர வேறு எதுவும் என்னால சொல்ல முடியாது.

என்னால உன்கிட்ட  இனி பேச முடியாது,
இனிமே என்னை ‌Disturb பன்னாத ப்ளீ‌ஸ்,
Thanks, bye

Ur friend

Monday, August 2, 2010

நீயும் நானும்

நீயும் நானும்..........

உன்னை புரிஞ்சிகவில்லை 
என்று அடிக்கடி
நீ 

சொல்லுவாய்
உண்மையில்
நீ--- தான் 

புரிஞ்சிகவில்லை 
என்னை,

உன்னிடம்
காதலை எதிர்பார்த்தேன்------
நீயோ 
கை காட்டிவிட்டாய்,

உன்னிடம்
நட்பை எதிர்பார்த்தேன்----
நீயோ
நடுத்தெருவில் விட்டு
போய்விட்டாய்,

உன் காதல் ‌பெரியது என்றால், 
என் காதல் அதைவிட பெரியது,
உன் நட்பு ‌மிக பெரியது என்றால்,
என் நட்பு அதையும்விட மிக மிக பெரியது
நீ தான் புரிந்துக்கொள்ளவில்லை...........


எனக்கு, 
புரியவில்லை 
உன் பேச்சு,

ன் நட்பு,

உன் காதல்,
உனக்கு புரிந்தால் சரி???????????

Thursday, July 8, 2010

உன் நினைவுகள்........

உன் நினைவுகள்...................
 
நான்
உன் 
நினைவுகளுடன் 
நிம்மதியின்றி இருக்க ?
 

நீ
என்
நினைவின்றி
உன் .................. உடன்
நிம்மதியாக...................?‌‌!!!!!!!!!!!!!!!

Saturday, June 26, 2010

நீ ஒரு தேவதை











நீ ஒரு தேவதை
நான் உன்னை 

பார்த்ததில்லை

நீ ஒரு தேவதை
எனக்கு மட்டும்

கேட்கிறது உன் குரல்

நீ ஒரு தேவதை
என் கைபேசியில் மட்டும் 

உன் வாசகம் தெரிகிறது

நீ ஒரு தேவதை
என் உள்ளம் 

உனக்கு மட்டுமே புரிகிறது

நீ ஒரு தேவதை----ஆம்
இப்புவியில் வந்து பிறந்த
ஒரு தேவதை நீ மட்டும் தான்





தேவதைக்கும் எனக்கும்
விளையாட்டாய் பந்தயம்
நான் சொன்னேன்  
”என்னை காதலிக்கிறாய் என்று 
உன்னை சொல்ல வைக்கிறேன் என்று?”
அவள் சொன்னால் 
”முடியாது?” என்று
சரி பார்க்கலாம் என
ஆரம்பித்தது பந்தயம்,
ஒரு மாதம் காலவகாசம்.................
கோபத்தில் நான் சிவக்க
குறும்பாய் அவள் சிரிக்க.......

Friday, June 25, 2010

காதலுக்கு கண் உண்டு

காதலுக்கு கண் உண்டு

காதலுக்கு 
கண் இல்லை என்று
யார் சொன்னது?????
என்னிடம்
உன் காதலை
சொல்வதற்கு
முன்..............
என்
ஜாதி,
ஜாதகம், 
கேட்டது
பார்த்தது
கணக்கீட்டது...........?
காதலுக்கு 
கண் ,
காது, 
வாய்யும் உண்டு
என்று எனக்கு புரிந்தது.

காதலும் நானும்

காதலும் நானும்.........

கடல் அலையில் 
மிதக்க கற்றுக்கொண்ட 
நான்
காதல்  அலையில் 
மூழ்கிவிட்டேன்........

Saturday, June 19, 2010

எனக்காக எழுதப்பட்ட கவிதை ---2

நான் எழுதவில்லை ஆனால், எனக்காக எழுதப்பட்டது.

நேற்று இறந்து விட்டேன்

சற்றே வியந்துதான் போகிறேன்
உன் மனதின் நிறம் மாறும்
குணத்தை எண்ணி....

அளவில்லா ப்ரியங்களுடன்
அணுஅணுவாய் என்னை காதலிக்க
முடிந்த உன்னால் எப்படி இன்னொரு
இதயத்தையும் காதலிக்க முடிந்தது?

நேற்று விளையாட்டாய் உன் கைப்பேசியை
எடுத்துப் பார்க்கையில்தான் என் மனம்
தற்கொலை செய்துகொண்டது.

எனக்கு மட்டுமே சொந்தமான
உன் Sent items' ல் யாரோ ஒருவருக்கு
நீ அனுப்பிய ஐலவ்யூக்களும், உம்மாக்களும்
என்னுள் ஏற்படுத்திய வலியை
உன்னால் உணரக்கூடுமா?

என் குரல் சேமித்து வைக்கப்பட்டிருந்த
உன் ரெக்கார்டிங்கில் இப்போது
இன்னொருவர் குரல்...
உன் தொலைபேசியில் இருந்த என்
அத்தனை புகைப்படங்களும் எங்கே போயிற்று?
உன்னால் பதில் சொல்ல முடிகிறதா?

என் முன்னாலே நீ உன் புதுக்காதலுடன்
சிரித்து பேசுகையில் நொடிக்கொருமுறை
உன் காதலின் நினைவுகளால்
கற்பழிக்கப்படுகிறேன்.
இறைவா என் எதிரிக்கும் வேண்டாம்
இப்படி ஒரு வேதனை.

எனக்கு நிச்சயமாய் தெரிகிறது
உன் ஸ்பரிசங்களும், உன் முத்தங்களும்
இனி இன்னொருவருக்கு தான் சொந்தம் என்று...
மூளைக்கு புரியும் இந்த உண்மையை
மனம் அடம்பிடித்து ஒப்புக்கொள்ள மறுக்கிறது.

உன் வாசம் படிந்த கைக்குட்டை..
உன்னுடன் கண்டு களித்த சினிமா டிக்கெட்..
ஓயாமல் சிரிக்கும் உன் புகைப்படம்..
காதலுடன் நீ வரைந்த கிரீட்டிங் கார்ட்
என உன்னை மட்டுமே நினைத்துக் கொண்டே
இருக்க வேண்டும் என நான் பத்திரப்படுத்திய
உன் நினைவுகள் அனைத்தும் வெறும்
நினைவுச் சின்னங்களாக மட்டுமே இருக்கும் என
சத்தியமாய் நினைக்கவில்லை...  

நன்றி:கவிதை காதலன்

எனக்காக எழுதப்பட்ட கவிதை

எனக்காக எழுதப்பட்ட கவிதை
 
எனக்காக எழுதப்பட்ட கவிதை
உனக்காக,
உன் 

பார்வைக்காக,

சட்டத்தின் பார்வையில்

ஆயிரம் குற்றவாளி தப்பிக்கலாம்
ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கபட கூடாது


உன் பார்வையில்
நான் குற்றவாளியா?, 

நிரபராதியா?


காதல் என்றால் என்ன??????

பெண் ஏன் அடிமையானாள்? தொகுப்பிலிருந்து, தந்தை பெரியார்
‘இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும்,  ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியது என்றும் கற்பித்து, அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகின்றது.’
அன்பு, ஆசை,  நட்பு என்பவற்றின் பொருளைத் தவிர, வேறு  பொருளை கொண்டதென்று சொல்லும் படியான காதல் என்னும் ஒரு தனித்தன்மை ஆண் – பெண் சம்மந்தத்தில் இல்லை என்பதை விவரிக்கவே இவ்வியாசம் எழுதப்படுவதாகும். ஏனெனில், உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி ,அதனுள் ஏதோ பிரமாதமான தன்மை ஒன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அனாவசியமாய் ஆண் -பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மயங்கச் செய்து காதலுக்காகவென்று இன்பமில்லாமல்,  திருப்தி இல்லாமல்,  தொல்லைபடுத்தப்பட்டு வரப்படுகிறதை ஒழிக்க வேண்டுமென்பதற்காகவேயாகும்.
ஆனால், காதல் என்றால் என்ன? அதற்குள்ள சக்தி என்ன? அது எப்படி உண்டாகின்றது? அது எதுவரையில் இருக்கின்றது? அது எந்ததெ ந்த சமயத்தில் உண்டாவது? அது எவ்வெப்போது மறைகின்றது ? அப்படி மறைந்து போய் விடுவதற்கும் காரணம் என்ன? என்பவை போன்ற விஷயங்களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் காதல் என்பதின் சத்தற்ற தன்மையும்,   உண்மையற்ற தன்மையும், நித்தியமற்ற தன்மையும்,(காதலை) அதைப் பிரமாதப் படுத்துவதின் அசட்டுத் தனமும் ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும்.
ஆனால் , அந்தப்படி யோசிப்பதற்கு முன்பே இந்தக் காதல் என்கின்ற வார்த்தையானது இப்போது எந்த அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றது? உலக வழக்கில் அது எப்படி பயன் படுத்தப்பட்டு வருகின்றது? இவற்றிற்கு என்ன ஆதாரம்? என்பவைகளைத் தெரிந்து ஒரு முடிவு கட்டிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இன்றைய தினம் காதலைப் பற்றி பேசுகிறவர்கள். “காதலென்பது அன்பல்ல, ஆசையல்ல, காமமல்ல  என்றும் அன்பு, நேசம், ஆசை, காமம், மோகம் என்பவை வேறு,  காதல் வேறு என்றும், “அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத்திற்காக ஏற்படுவதாகும்”  என்றும், அதுவும்  “இருவருக்கும் இயற்கையாய் உண்டாகக் கூடியதாகும்” என்றும்  “அக்காதலுக்கு இணையானது உலகத் தில் வேறு ஒன்றுமேயில்லை” என்றும்,“அதுவும்  ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும் , ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும்”  என்றும், அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக- இருவருக்கும் ஒரு காலத்தில் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு எந்தக் காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது” என்றும், பிறகு வேறொருவரிடமும் காதல் ஏற்பட்டு விட்டால் அது காதலாயிருக்க முடியாது; அதை விபச்சாரமென்று தான் சொல்ல வேண்டுமே ஒழிய அது ஒருக்காலும் காதலாகாது” என்றும், மற்றும் “ஒரு இடத்தில் உண்மைக் காதல் ஏற்பட்டு விட்டால், பிறகு யாரிடமும் காமமோ, மோகமோ, விரகமோ ஏற்படாது என்றும் சொல்லப்படுகின்றன.
மேலும் ,இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும்,  ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியது என்றும் கற்பித்து, அந்தப்படி கட்டாயப் படுத்தியும் வரப்படு கின்றது.
இதன் பலாபலன் எப்படியிருந்தாலும்  இந்தப்படி சொல்லுகின்றவர்களை எல்லாம் உலக அனுபவமும், மக்க ள் தன்மையின் அனுபவஞானமும் இல்லாதவர்கள் என்றோ, அல்லது இயற்கை த் தன்மையையும்  உண்மையையும் அறியாதவர்கள் என்றோ ,அல்லது உண்மையை அறிந்தும் வேறு ஏதோ ஒரு காரியத்திற்காக வேண்டி வேண்டுமென்றோ மறைக்கின்றவர்கள் என்றே தான் கருதவேண்டி இருக்கின்றது.
அன்றியும், இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி நாம் சொல்லும் மற்றொரு விஷயமென்னவென்றால், இன்று பெரும்பான்மை மக்கள் ‘காதலன்-காதலியாக’ வாழ்வதன் தன்மையெல்லாம் வேறு ஒருவர் ஜோடி பார்த்துச் சேர்த்ததும், பிள்ளைகளைப் பெறுவதற்கென்றும் , வீட்டு வாழ்க்கையின் உதவிக்கென்றும் , இயற்கை உணர்ச்சிக்கும்,  பரிகாரத்திற்கென்றும் சேர்க்கப் படுகின்ற ஜோடிகளாகத் தான் இருந்து வருகிறதே தவிர,  தாங்களாகத் தங்கள் காதல் மிகுதியால் காதல் தெய்வத்தால் கூட்டுவித்ததைக் காணுவது அருமையாக இருக்கிறது.இது எப்படி இருந்தாலும் எந்தக் காரணத்திற்கு ஆனாலும் , ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை,  காதல்,  காமம்,  நட்பு,  நேசம், மோகம்,  விரகம் முதலாகியவைகளைப்பற்றி மற்றொரு பெண்ணோ, ஆணோ மற்ற மூன்றாமவர்கள் யாராவதோ பேசுவதற்கோ நிர்ணயிப்பதற்கோ, நிர்பந்திப்பதற்கோ சிறிதுகூட உரிமையே கிடையாது என்றும் சொல்லுகிறோம்.
இன்னும் திறந்து வெளிப்படையாய் தைரியமாய் மனித இயற்கையையும்,  சுதந்திரத்தையும்,   சுபாவத்தையும் அனுபவத்தையும் கொண்டு பேசுவதானால்,  இவை எல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும் , தனக்குப்பிடித்த பலகாரக்கடையில் பலகாரம் வாங்குவது போலவும், சாமான் கடைகளில் சாமான் வாங்குவது போலவும் அவனவனுடைய தனி இஷ்டத்தையும் மனோபாவத்தையும் திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும் இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப் பிரசங்கித்தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகுமென்றும் சொல்ல வேண்டும்.
இப்படிச் சொல்லப்படுவது கூட இவ்வளவு பெருமையையும், அணி யையும், அலங்காரத்தையும் கொடுத்து பேசப்பட்ட காதல் என்பதை முன் குறிப்பிட்டபடி, அது என்ன? அது எப்படி உண்டாகின்றது? என்பதை யோசித்துப்பார்த்தால் யாவருக்கும் சரி என்று விளங்கிவிடும். காதல் என்கின்ற வார்த்தை தமிழா? வடமொழியா என்பது ஒரு புறமிருந்தாலும், தமிழ் மொழியாகவே வைத்துக்கொண்டாலும் அதற்கு ஆண், பெண் கூட்டுத் துறையில் அன்பு, ஆசை, ஆவல், நட்பு, நேசம், விரகம் என்பவைகளைத் தவிர வேறுபொருள்கள் எங்கும் எதிலும் காணப்படவில்லை.
அன்றியும், அகராதியில் பார்த்தாலும் மேற்கண்ட பொருளைத்தவிர வடமொழி மூலத்தை அனுசரித்தால்  காதல் என்பதற்கு கொலை, கொல்லல், வெட்டுதல், முறித்தல் என்கின்ற பொருள்கள்தான் கூறப்பட்டிருக்கின்றன. மற்றபடி, தனித் தமிழ் மொழியில் பார்த்தாலும் ஆண் -பெண்  சேர்க்கை, கூட்டு முதலாகியவை சம்மந்தமான விஷயங்களுக்கும், அன்பு, ஆசை, நட்பு, நேசம் என்பவைகளைத் தவிர வேறு தமிழ் மொழியும் நமக்குக் காணப்படவில்லை. இவைகளுடன் காதல் என்பதைச் சேர்த்துக் கொண்டாலும் இக்கருத்துக்களையே தான் மாற்றி மாற்றி ஒன்றுக்கு மற்றொன்றாகக் கூறப்படுகின்றதே தவிர காதலுக்கென்று வேறு பொருள் காணப்படவில்லை.
ஆதலால், இவைகளன்றி காதல் என்பதற்கு வேறு தனி அர்த்தம் சொல்லுகின்றவர்கள் அதை எதிலிருந்து எந்தப் பிரயோகத்திலிருந்து கண்டுபிடித்தார்கள் என்பது  நமக்கு விளங்கவில்லை.

நிற்க ,இப்படிப்பட்ட காதலானது ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ எப்படி உண்டாகின்றது? இது தானாகவே உண்டாகின்றதா? அல்லது மூன்றாவது மனிதனுடைய பிரவேசத்தைக் கொண்டு உண்டாகின்றதா? ஒரு சமயம் தானாகவே உண்டாவதாயிருந்தால் எந்தச் சந்தர்ப்பத்தில், எந்த ஆதாரத்தின்மீது என்பவைகளைக் கவனித்தால் பெண் ஆணையோ, ஆண் பெண்ணையோ தானே நேரில் பார்த்தாலும், அல்லது தான் மூன்றாவது மனிதர்களால் கேள்விப்படுவதாலும்,  உருவத்தையோ,  நடவடிக்கையையோ, யோக்கியதையையோ வேறு வழியில் பார்க்கக் கேட்க நேரிடுவதாலுமே தான் உண்டாகக் கூடுமே தவிர இவைகள் அல்லாமல் வேறு வழியாக என்று சுலபத்தில் சொல்லிவிட முடியாது.
இந்தப் படியும் ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடத்தில் காதல் ஏற்பட்டு, அந்தப் பெண்ணுக்கு அந்த ஆணிடத்தில் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். இந்தப்படியே ஒரு பெண் ணுக்கு ஒரு ஆணிடம் காதல் ஏற்பட்டு அந்த ஆணுக்கு அந்தப் பெண்ணிடம் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். எப்படியும் ஒரு மனிதன் ஒரு வஸ்துவைப் பார்த்த மாத்திரத்தில், கேட்ட மாத்திரத்தில் தெரிந்த மாத்திரத்தில் அந்த வஸ்து தனக்கு இருக்கலாம் – வேண்டுமென்பதாக ஆசைப்படுகின்றானோ, ஆவல் கொள்கி றானோ அதுபோல்தான் இந்த காதல் என்பதும் ஏற்படுவதாயிருக்கின்றதே தவிர, வேறு எந்த வழியிலாவது ஏற்படுகின்றதா என்பது  நமக்குப் புலப் படவில்லை.

எப்படிப்பட்ட காதலும் ஒரு சுய லட்சியத்தை அதாவது தனது இஷ்டத்தை , திருப்தியைக் கோரத்தான் ஏற்படுகின்றதே தவிர வேறில்லை என்பதும் காதலர்கள் என்பவர்களின் மனோபாவத்தை கவனித்தால் விளங்காமல் போகாது.
அதாவது, அழகைக் கொண்டோ, பருவத்தைக் கொண்டோ, அறிவைக் கொண்டோ, ஆஸ்தியைக் கொண்டோ, கல்வியைக் கொண்டோ, சங்கீதத்தைக் கொண்டோ, சாயலைக் கொண்டோ, பெற்றோர் பெருமையைக் கொண்டோ, தனது போக போக்கியத்திற்கு பயன்படுவதைக்கொண்டோ,  அல்லது மற்ற ஏதோ ஒரு திருப்தியை அல்லது தனக்குத் தேவை யான ஒரு காரியத்தையோ, குணத்தையோ கொண்டே தான் யாரும் எந்தப் பெண் ணிடமும்,ஆணிடமும் காதல் கொள்ளமுடியும். அப்படிப்பட்ட அந்தக் காரியங்களெல்லாம் ஒருவன் காதல் கொள்ளும்போது இவன் அறிந்தது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது அங்கு இருப்பதாக அவன் நினைத்துக் காதல் கொண்டு இருந்தாலும் இருக்கலாம் -அல்லது வேறு மாத்திரத்தில் காட்டப் பட்டதாக  இருந்தாலும் இருக்கலாம்.
உதாரணமாக, ஒரு நந்தவனத்தில் ஒரு பெண் உல்லாசமாய் உலாத்துவதை ஒரு ஆண் பார்க்கின்றான். பார்த்தவுடன் அந்தப் பெண்ணும் பார்க்கின்றாள். இரண்டு பேருக்கும் இயற்கையாய் ஆசை உண்டாகிவிட்டது. பிறகு நீ யார் என்று இவர்களில் யாரோ ஒருவர் கேட்கிறார்கள். பெண் தன்னை ஒரு அரசன் குமார்த்தி என்று சொல்லுகிறாள். உடனே ஆண் காதல் கொண்டு விடுகிறான். இவனை யார் என்று அவள் கேட்கிறாள். இவன் தான் ஒரு சேவகனுடைய மகன் என்று சொல்லுகிறான். உடனே அவளுக்கு அசிங்கப்பட்டு, வெறுப்பேற்பட்டுப் போய்விட்டது. இது சாதாரணமாய் நிகழும் நிகழ்ச்சி. இங்கு ஏற்பட்ட காதல் எதை உத்தேசித்தது?

நிற்க, அவன் தன்னை சேவகன் மகன் என்று சொல்லாமல் தானும் ஒரு பக்கத்து தேசத்து ராஜகுமாரன் என்று சொல்லி விட்டால் அவளுக்கு அதிக காதல் ஏற்பட்டு “மறு ஜென்மத்திலும்” இவனை விட்டுப் பிரியக் கூடாது என்று கருதிவிடுகிறாள். 4-நாள் பொறுத்த பின்புதான் காதல் கொண்டவன் அரச குமாரன் அல்ல என்றும், சேவகன் மகன் என்று அறிந்தாள் என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அந்தக் காதல் அப்படியே இருக்குமா? அல்லது இருந்தாகவேண்டுமா என்பதை யோசித்துப் பார்த்தால் காதல் ஏற்படும் தன்மையும், மறுக்கும் தன்மையும் விளங்கும். இந்தப் படிக்கே ஒரு பெண்ணை நோயல்லாதவள் என்று கருதி ஒருவன் காதல் கொண்டபின் நோயுடையவள் என்று தெரிந்தது அல்லது மற்றவனுடைய மனைவி என்று தெரிந்தது அல்லது ஒரு தாசி என்று தெரிந்தது அல்லது தன்னை மோசம் செய்து தன்னிடம் உள்ள பொருளை அபகரிக்க வந்தவள் என்று தெரிந்தது. இதுபோலவே இன்னமும் தான் முதலில் நினைத்த தற்கு அல்லது தனது நன்மைக்கும்இ திருப்திக்கும்இ இஷ்டத்திற்கும் விரோதமாயோ தான் எதிர்பார்க்காத கெட்டகாரியத்திற்கு அனுகூலமாகவோ ஏற்பட்டுவிட்டால் அந்தக் காதல் பயன் படுமா? அதை எவ்வளவுதான் கட்டிப்போட்டாலும் அது இருக்க முடியுமா? என்பவைகளை யோசித்தால் ‘உண்மைக் காதலின்’ நிலையற்ற தன்மை விளங்காமல் போகாது.
நிற்க, உண்மைக் காதல் என்பது ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் உண்டாகுமா? அல்லது கொஞ்ச நாளாவது பழகியவுடன் உண்டாகுமா? பார்த்ததும் ஏற்பட்ட காதல் உயர்வானதா? அல்லது சிறிது நாள் பழகியபின் ஏற்படும் காதல் உயர்வானதா? சரீரத்தைக்கூடச் சரியாய் தெரிந்து கொள்ளாமல் தூர இருந்து பார்ப்பதாலேயே ஏற்படும் காதல் நல்லதா? அல்லது சரரத்தின் நிலை முதலியவைகள் தெரிந்து திருப்தி அடைந்த காதல் நல்லதா? என்பவைகளை கவனிக்கும்போது சரீர மாறுபாடாலும், பொருத்தமின்மையாலும் ஏன் எப்படிப்பட்ட உண்மைக் காதலும் மாறமுடியாது? என்பதற்கு என்ன விடை பகர முடியும்? அல்லது உண்மையாகவே ஒருத்தன் ஒருத்தியுடன் காதல் கொண்டு விட்டால் ஒருத்தி தப்பாய் அதாவது வேறு ஒருவனிடம் காதல் கொண்டுவிட்டதாய் கருத நேர்ந்தால் அது பொய்யா கவோ, மெய்யாகவோ இருந்தாலும் தன் மனதுக்கு சந்தேகப் படும்படி விட்டால் அப்போது கூட காதல் மாறாமல் இருந்தால் தான் உண்மைக்காதலா? அல்லது தன் மனம் சந்தேகப்பட்டால் அதிருப்தி அடைந்தால் நீங்கிவிடக் கூடிய காதல் குற்றமான காதலா? என்பதற்கு என்ன மறுமொழி பகரமுடியும்.
காதல் கொள்ளும்போது காதலர்கள் நிலைமை, மனப் பான்மை, பக்குவம், லட்சியம் ஆகியவைகள் ஒரு மாதிரியாக இருக்கலாம். பிறகு, கொஞ்சகாலம் கழிந்தபின் இயற்கையாகவே பக்குவம் நிலைமை லட்சியம் மாறலாம். இந்த மாதிரி சந்தர்ப்பங் களிலும் காதலுக்காக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக் கொண்டு சதா அதிருப்தியில் துன்பத்தில் அழுந்த வேண்டியது தானா என்று பார்த்தால் அப்போதும் காதலுக்கு வலுவில்லாததையும் அது பயன்படாததையும் காணலாம்.
ஒரு ஜதை காதலர்களில் அவ்விருவரும் ஞானிகளாய் துறவிகளாய் விட்டார்களானால் ,இந்த சந்தர்ப்பத்தில் ஒருவரை ஒருவர் பிரிவதும், வெறுப்பதும் காதலுக்கு விரோதமாகுமா? விரோதமானால் அப்படிப்பட்ட காதல் பயன்படுமா? விரோத மில்லையானால் ஒருவர் ஞானியாகி துறவியாகி விட்டதால் மற்றவரை விட்டுப் பிரிந்து கொள்ளுவது காதலுக்கு விரோத மாகுமா? என்பதும் கவனித்தால் காதலின் யோக்கியதை விளங்கா மல்   போகாது. பொதுவாக மனித ஜீவன் ஒன்றைப் பார்த்து நினைத்து ஆசைப்படுவதும் ஒன்றினிடம் பலதினிடம் அன்பு வைப்பதும் நேசம் காட்டுவதும் இயற்கையேயாகும்.
அதுபோலவே ,மனிதனுக்குத் தானாகவே எதிலும் விரக்தி வருவதும், வெறுப்புக்கொள்வதும், பிரிவதும் இயற்கையேயாகும். பெலவீனமாய் இருக்கும்போது ஏமாந்து விடுவதும் உறுதி ஏற்பட்டபின்பு தவறுதலைத் திருத்திக்கொள்ள முயற்சிப்பதும், அனுபவ ஞானமில்லாதபோது கட்டுப்பட்டுவிடுவதும் அனுபவம் ஏற்பட்ட பிறகு விடுதலை செய்து கொள்ளுவதும் இயற்கையே யல்லவா?.
உதாரணமாக ஒரு வாலிபன் ஏமாந்து ஒரு தாசியிடம் காதல் கொண்டு சொத்துக்களை யெல்லாம் கொடுத்து விடுவதைப் பார்க்கின்றோம். அந்த வாலிபனுக்கு அந்த தாசியிடம் ஏற்பட்டது காதல் என்பதா? அல்லது காமம் என்பதா? அதே தாசி சில சமயத்தில் தனக்குத் தாசித் தொழில் பிடிக்காமல் இந்த வாலிபனி டமே நிரந்தரமாயிருந்து காலத்தைக் கழிக்கலாம் என்று கருதி விடுவதைப் பார்க்கின்றோம். ஆகவே, இந்த தாசி கொண்டது காதலா அல்லது வாழ்க்கைக்கு ஒரு சௌகரியமான வழியாய் இதை வாலிபன் அறியாமல் நேசத்தை வளர்த்துக்கொண்டே வந்தால் இது ஒத்த காதலாகி விடுமா? இப்படியெல்லாம் பார்த்தால் காதல் என்பது ஆசை, காமம், நேசம், மோகம், நட்பு என்பவைகளைவிட சிறிதுகூட சிறந்தது அல்லவென்பது விளங்கி விடும். அதற்கு ஏதேதோ கற்பனைகளை கற்பித்து ஆண்- பெண்களுக்குள் புகுத்தி விட்டதால் ஆண், பெண்களும் தங்கள் உண்மையான காதலர்கள் என்று காட்டிக்கொள்ள வேண்டு மென்று கருதி- எப்படி பக்திமான் என்றால் இப்படி இப்படி எல்லாமிருப்பான் என்று சொல்லப்பட்டதால், அனேகர் தங்களைப் பக்திவான்கள் என்று பிறர் சொல்ல வேண்டுமென்று கருதி பூச்சுப் போடுவதும்  பட்டை நாமம் போடுவதும் , சதா கோவிலுக்குப் போவதும், பாட்டுகள் பாடி அழுவதும் வாயில் சிவசிவ என்று சொல்லிக்கொண்டிருப்பதுமான காரியங்களைச் செய்து பக்தி மான்களாகக் காட்டிக்கொள்ளுகின்றார்களோ அது போலும், எப்படிக் குழந்தைகள் தூங்குவது போல் வே ஷசம் போட்டு கண்களை மூடிக்கொண்டிருந்தால் பெரியவர்கள் குழந்தைகளின் தூக்கத்தைப் பரிசோதிப்பதற்காக “தூங்கினால் கால் ஆடுமே” என்று சொன்னால் அந்தக் குழந்தை தன்னைத் தூங்குவதாக நினைக்கவேண்டுமென்று கருதி காலைச் சிறிது ஆட்டுமோ அதுபோலும்,  எப்படி பெண்கள் இப்படி இப்படி இருப்பதுதான் கற்பு என்றால், பெண்கள் அதுபோலெல்லாம் நடப்பது போல் நடப்பதாய் காட்டித் தங்களைக் கற்புள்ளவர்கள் என்று காட்டிக் கொள்ளுகின்றார்களோ அது போலும், உண்மையான காதல்களானால் இப்படி இருப்பார்களே என்று சொல்லி விட்டால் அல்லது அதற்கு இலக்கணம் கற்பித்து விட்டால் அது போலவே நடந்து காதலர்கள் என்பவர்களும் தங்கள் காதலைக் காட்டிக் கொள்ளுகிறார்கள். இதற்காகவே அவர்கள் இல்லாத வேஷத்தையெல்லாம் போடுகிறார்கள். அதை விவரிப்பது என்றால் மிகவும் பெருகிவிடும்.
ஆகவே , ஆசையை விட,  அன்பை விட,  நட்பை விட காதல் என்பதாக வேறு ஒன்று இல்லை என்றும்;  அவ்வன்பு, ஆசை,  நட்பு ஆகியவைகள் கூட மக்களுக்கு அஃறிணைப் பொருள்கள்  இடத் திலும் மற்ற உயர்திணைப் பொருள்களிடத்திலும் ஏற்படுவது போல் தானே ஒழிய வேறில்லையென்றும் அதுவும் ஒருவருக் கொருவர் அறிந்து கொள்வதிலிருந்து,  நடவடிக்கையில் இருந்து, யோக்கியதையில் இருந்து,  மனப்பான்மையில் இருந்து,  தேவை யில் இருந்து, ஆசையில் இருந்து உண்டாவதென்றும்; அவ்வறிவும் நடவடிக்கை யும் யோக்கியதையும் மனப்பான்மையும் தேவையும் ஆசையும் மாறக்கூடிய தென்றும்; அப்படி மாறும் போது அன்பும் நட்பும் மாறவேண்டியது தான் என்றும்,  மாறக் கூடியது தான் என்றும் நாம் கருதுகின்றோம். ஆகவே இதிலிருந்து நாம் யாரிடமும் அன்பும் ஆசையும்  நட்பும் பொருளாகக் கொண்ட காதல் கூடாதென்றோ, அப்படிப்பட்டதில்லை என்றோ சொல்ல வரவில்லை.
ஆனால், அன்பும், ஆசையும், நட்பும் மற்றும் எதுவானாலும் மன இன்பத்திற்கும், திருப்திக்குமேயொழிய, மனதிற்குத் திருப்தியும், இன்பமும் இல்லாமல் அன்பும், ஆசையும், நட்பும் இருப்பதாய் காட்டுவதற்காக அல்ல என்பதை எடுத்துக் காட்டு வதற்காகவே இதை எழுதுகின்றோம்.
இதுவும் ஏன் எழுதவேண்டி யதாயிற்று என்றால் மற்றவர்கள் திருப்தியிலும், சந்தோஷத்திலும் நுழைந்து கொண்டு தொட்டதிற்கெல்லாம் ‘இது காதலல்ல’  ‘அது காதலுக்கு விரோதம்’ ‘அது காம இச்சை’  ‘ இது மிருக இச்சை’ என்பது போன்ற அதிகப் பிரசங்கித்தனமான வார்த்தைகளை ஒரு வித பொறுப்புமில்லாதவர்கள் எல்லாம் கூறுவதால் அப்படிப்பட்டவர்கள் கூற்றையும் கூறும் காதலையும் சற்று பார்த்துவிடலாம் என்றே இதைப்பற்றி எழுதலானோம்.
———————————————————————————————–
பெண் ஏன் அடிமையானாள்?
தொகுப்பிலிருந்து,

 நன்றி:
தூமை

உன் பார்வையில் என் காதல்

உன் பார்வையில் என் காதல்

பார்க்க மட்டுமே கண்ணுக்குப் கண்ணாடி போட்டுக் கொண்டால்
பழகாத  மொழியைப் படித்துவிட முடியுமா? ---- நீயும்
நட்பு என்ற கண்ணாடி‌ போட்டுக் கொண்டால்
நான் கொண்ட காதலை புரிந்துகொள்ள முடியுமா?

உன் பார்வையை மாற்றி பார் --- என்
உள்ளம் உனக்கு புரியம்
உலகில் உன்னை விரும்பும் ஒரு
உயிர் நான் என்று,
உனக்கு புரியும் போது
உன்னை விட்டு போய்யிருப்பேன்
உன் நினைவுகளுடன் நான்...................

Wednesday, June 16, 2010

உண்மையும் நீயும்

உண்மையும் நீயும் 
உண்‌மை மட்டுமே உண்மை
மலர் உண்மை
மலரின் மணம் உண்மை
நதி உண்மை
நதியின் ஓசை உண்மை

நீ என்பதும்  நான் என்பதும் உண்மை
நம்முடைய காதலும் உண்மை
உண்மை மட்டுமே உண்மை
நீ சொல்வதும் உண்மை
நான் சொல்வதும்  உண்மை

உனக்கும் எனக்கும் மட்டுமே
தெரியும்  அது உண்மையல்ல...........


 







Sunday, June 13, 2010

நான் ஒரு ஜீவன்

உன் காதலை விரும்பும்  ஒரு ஜீவன்
 
நான் உன்னை நினைப்பது தான் உனக்கு தொந்தரவா
இல்லை தொந்தரவாகதான் நான் இருக்கிறேனா
நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ நினைக்கிறாய்
நீ என்னிடம் சொன்னபடிதான் நடந்தாயா?
எனக்கு  தெரியவில்லை.
பிரிவின் விளிம்பிள் நிற்கிறேன் விருப்பம் இல்லாமல்,
 
நீ என்னை ஏதேதோ நினைக்க வைக்கிறாய்,
பழைய நினைவுகள் 
எல்லாவற்றையும் நினைக்க வைக்கிறோய்
காதல் ஒன்னும் விளையாட்டல்ல,
நான் ஒன்னும் பொம்மையல்ல

நான் ஒரு ஜீவன், 
உன் காதலை விரும்பும்  ஒரு ஜீவன்.
நான் உன்னை காதலிக்கிறேன்,
நீயும் என்னை 
காதலிப்பதாக சொன்னாய், வெறும் வாக்கியமாக,
அவை காற்றில்  கலந்த வெறும் அர்த்தமற்ற  வார்த்தையாக,

 
நான்  உன்னுடன் இருந்தால்   
உன்  அன்பை உனக்கு  புரியவைக்க முடியும், உன்னை விட்டு பிரிந்து நான் போனால்,
உன்னை
பழிவாங்குவதாக தான் நீ நினைப்பாய்,
நான் விளையாடவில்லை
நான் தவறேதும் செய்யவில்லை,
ஆனால் அதற்கும் மேலே ஏதோ செய்கிறேன்.

நான்  உனக்கு முக்கியமானவனா?
எதை என்னிடம் இருந்து நீ எதிர்பார்க்கிறாயோ
அதையே நானும் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல்
உனக்கு தர விரும்புகிறேன்.
இதுவரை இது உனக்கு  புரியவில்லை என்றால்
தூங்கும் போது யோசித்து பார்.


நீ ஆச்சரியம் படுவாய்
நான் 
எங்கே போகிறேன் என்று,
ஆனால்  என்னை பார்க்க விரும்ப மாட்டாய் .
நீ  ஆச்சரியம் படுவாய் 
நான் எப்படி இருப்பேன் என்று ஆனால்,
என்னை பற்றி கவலைபடமாட்டாய்

நான்  உன் மீது அதிக  அக்கறை உள்ளவன்,
அளவுக்கு மீறி  அக்கறை உள்ளவன்,

உன்னை விட்டு பிரிந்தாலும் என்னால் மாற்றிக் கொள்ள முடியாது .
ஒரு நாள் சந்திபோம் ,
அப்போது சொல்வாய் 
"நீ  நன்றாக தான் இருக்கிறாய் என்று".
எனக்கு அது தான் வேண்டும் 
ஆனால் எனக்கு தெரியவில்லை 
நான் எப்படி இருப்பேன் என்று,
என்ன நடக்க போகிறது என்று 
சத்தியமாக தெரியவில்லை

புத்தனும் நீயும்--- கவிதை

புத்தனும் நீயும்


புத்தனுக்கு போதிமரம்-- எனக்கு
நீதான் போதிமரம்
அவன்
கவலை போக 

ஆசையை துறக்க ‌சொன்னான்
நீயோ-- என்
கவலையை போக்க
காதலை துறக்க சொல்கிறாய்,

புத்தனுக்கு போதிமரம்-- எனக்கு
நீதான் போதிமரம்


காதலித்தால் கவிதை வரும்

காதலித்தால் கவிதை வரும்

கவிதை வரும் காதலித்தால்
கவிதை வரும் காதலித்தால்
கவியே எனக்கு வந்தாள் காதலியாக


உன்னை நினைச்சாலே மகிழ்ச்சி கொட்டுது
சொன்ன நம்ப மாட்ட என் மூச்சு முட்டுது
நீரும் எனக்கு சுட்டுது--- உன் 

நினைவும் என்னை வாட்டுது
கண்களில் கண்ணீர் ‌சொட்டுது
‌கவலை என்னை புரட்டி போடுது
‌தட்டு தடுமாறி புட்டு புட்டு வைக்கிறேன்
என் மனதில் உள்ளதை
என்னை விட்டு போகாதே?!! ப்ளீஸ்........


நீயில்லனா நான் அவுட்டு
நீயில்லனா நான் அவுட்டு
இதுல உனக்கு என்னடி டவுட்டு


காவல் துறை போட்டிருக்கு
காக்கி கோட்டு--- என்
காதலுக்கு  நீ போடாதே 

கள்ள பூட்டு

கவிதையாய் இருக்கு உன் பேரு
கவலையாய் இருக்கேன்
நான் ‌பாரு
காத்திருக்கு என் உசுறு--- நீ
ஒரு புரியாத புதிறு


வானத்துல போகுது மூனு
நீ தான் நான் தேடிய மானு
உன்னை பார்த்து வெக்கப்படுது மீனு
நீ இல்லையின்னா என் வாழ்க்கை வீனு
உன் இதழில் வடியுது தேனு

உன் வார்த்தைக்காக காத்திருக்கிறேன் நானு.

கடைசியா சொல்றேன் ஒண்ணு
கடைசியா சொல்றேன் ஒண்ணு
கடைசி வரை நீ தான் என் கண்ணு!

காதலுக்கு கண் இல்லை

காதலுக்கு கண் இல்லை


காதலுக்கு கண் இல்‌லை என்பார்கள்
நான் உன்னை பார்க்கவில்லை
நீயும் என்னை பார்க்கவில்லை
உண்மையில் காதலுக்கு 

கண் தேவை இல்லை தான்

காதல் கவிதை

பொய் சொல்வது 
அவளுக்கு பிடிக்காது
பொய்யை தவிர 

அவள்  
வேறு எதுவும் சொல்வது கிடையாது
பொய் சொல்வது 

அவளுக்கு பிடிக்காது
அவளை தவிர 

வேறு யாரும்
பொய் சொல்வது அவளுக்கு பிடிக்காது

Sunday, June 6, 2010

ஏன் இப்படி செய்தாய்

ஏன் இப்படி செய்தாய் நீ

ராங் நம்பராய் நீ என்னிடம் பேச ஆரம்பித்தாய் இன்று
ராங்காக நான் போக,  ஏன் இப்படி செய்தாய் நீ

நாட்கள் பல தூங்காமல் வளர்த்த காதல் இன்று
நான் மட்டும்
தூங்காமல் இருக்க வைத்தாயே, ஏன் இப்படி செய்தாய் நீ.

காதல் வேண்டாம், காதல் வேண்டாம்
கழற்றி விடுவார்கள் என்று  ‌எச்சரித்தான் - நண்பன் 

காதில் வாங்காமல் காதலித்தேன்- நீயோ
கழற்றி விட்டாய் என்னை உன் மனதிலிருந்து,
ஏன் இப்படி செய்தாய் நீ.


அவள் டைம் பாஸ்க்கு பேசுகிறாள்,
அ‌வளை நம்பாதே என்றான் நண்பன்- என்
ஆவியே பாஸ் ஆகிடும் போலிருக்கு இப்போ,

ஏன் இப்படி செய்தாய் நீ.

பூஸ்டர் காட்டு போட்டு பேசியே நீ -என்னை
பூஸ்டர் குடிக்க மருத்துவமனையில்
சேர்த்துவிட்டாய் இன்று,
ஓ........, என் வேல்டிட்டி முடிந்துவிட்டாதா?
ஏன் இப்படி செய்தாய் நீ.

சிரிக்க சிரிக்க பேசிவிட்டு 

நீ போய்விட்டாய்,
பலர் என்னை பார்த்து
 
சிரிக்க சிரிக்க பேசவிட்டு 
நீ போய்விட்டாய்,
ஏன் இப்படி செய்தாய் நீ.

சொல்லடி ஏன்னடி ஏன்னடி இப்படி செய்தாய், நீ
ஏன்ன‌டி இப்படி செய்தாய் எனக்கு????

நேரம் வரும் காதலிக்க

 நேரம் வரும் காதலிக்க


நான்…
நான் காதலிக்கப் போகின்றேன்
ஆமாம்
நான் காதலிக்கப் போகின்றேன்
என்னைத் தேடி அவள் வருவாளென
காத்திருக்காமல்
நான் காதலிக்கப் போகின்றேன்

பாடசாலை
படிக்கும் போது என்ன காதல்
பலரும் பேசுவார்களே என்றெண்ணி
பல்லைக் கடித்துக் காத்திருந்தேன்

மேற்படிப்பு
படிக்கும் போது
பாதியிலே குழப்பாதே
பார்த்தவர்கள் பளிப்பார்களே என்று
பொறுமையுடன் பொறுத்திருந்தேன்

அதுவும் முடித்தபின்னே
வேலையில்லாமல் உனக்கென்ன காதல்
சம்பாதிப்பவர்கள் கேட்பார்கள் என்று
கடுகதியில் வேலையைத் தேடிக்கொண்டேன்
கரங்களில் காசு வந்ததால்
கரையிலிருக்கும் பெற்றோரை மறந்துவிட்டான் – என்ற
பொல்லாச் சொல்லுக்குப் பயந்து
அமைதியாய் உழைத்துக் கொடுத்தேன்
சரி
படித்தும் முடித்துவிட்டேன்
பட்டத்தையும் பெற்றுவிட்டேன்
பயமின்றி பணத்தைப் பாவிக்க
பேர் சொல்லும் வேலையையும் எடுத்துவிட்டேன்
உழைத்தும் கொடுத்துவிட்டேன் – இனி
பாவி மனம் பொறுத்தது போதுமென்று
புதிதாய்க் காதலிக்க
புத்துணர்ச்சியுடன் வெளிக்கிட்டேன்

காதலிக்கலாம்…
ஒரு கை பார்த்துவிடுவோம்
புறப்பட்ட எனக்கு
சகுனம் பிழைத்தாற்போல்
நாலு கழுதை வயதாகிவிட்டது
இனி என்ன காதல் உனக்கு
முகத்தில் அடித்தாற் போல்
முடியாமல் இருந்தது
இருந்தும் முயற்சி செய்தேன்
முடியவில்லையே
என்னை ஒருத்தியும் பார்க்கவில்லை
அவர்கள் தங்கள் காதலனுடன்
சல்லாபித்திக்கொண்டு இருந்தார்கள்.----சரி
அவர்கள் பார்க்கவில்லை
நானாவது பார்ப்போமே
சின்ன முயற்சி
என் சின்ன முயற்சியே…
சுக்குநூறாக உடந்ததே.
“அண்ணா” என்றார்கள்
அந்த இளவட்டப் பெண்கள்
ஏதோ…
கழுத்தில் தூக்குக் கயிறு
விழுந்தாற்போல் எனக்குள் ஓர் திணறல்
தத்தளித்து சுயநினைவுக்கு வந்து
வேண்டாம்…
வேண்டாம் இப்பழம் புளிக்கும் என்று
மனக் கனவுகளைக் கலைத்துவிட்டு – என்
மனைவி மஞ்சத்தில் மயங்கலாம் என்று
முடிவாக முடிவெடுத்தேன்
நான்…
நான் காதலிக்கப் போகின்றேன்
ஆமாம்
நான் காதலிக்கப் போகின்றேன்
என்னைக் கட்டிக் கொள்ளும் என்னவளை – என்
வாழ்வில் முதல் முறையாக காதல்
காத்திருக்காமல் கட்டிக் கொள்ளப் போகிறது
நான் காதலிக்கப் போகின்றேன்
கஷ்டப்பட்டு படித்து முன்னேறியவர்களுக்காக…

நான் எழுதவில்லை, 
ஆனால் எனக்காக எழுதப்பட்டது, 
என்று எத்தனை பேர் இதுபோல்
நினைத்து வருந்துகிறார்கள்.
ஆதலினால்,
காலம் வரும் வரை காத்திராமல்
காதல் செய்யுங்கள்,
எந்த பெண்ணாக இருந்தாலும்,
எத்தனை பெண்களாக இருந்தாலும்
எல்லோரையும் காதலியுங்கள்
எந்த வயதிலும்,
வாழ்த்துக்கள்

கடிதம்---4

அடிக்கடி சண்டை வரும்
நமக்குள்
ஆனால்...
ஒவ்வொரு முறையும்
தோற்கிறேன் நான் உன்னிடம்
உனக்கான காதலோடு

என்ன செய்கிறாய், என்ன நினனக்கிறாய் என்பதை ஒவ்வொரு நிமிடமும் அன்று போல் இன்றும் மனத்திரையில் ஓடுகிறது.

உன் எத்தனையோ நண்பர்களில் நானும் ஒருவன்,
எந்த வகையில் மற்றவர்களை விட வித்தியாசமானவன் நான்? என்று கேட்டதற்கு நீ சொன்ன பதில் நினைவிருக்கிறதா உனக்கு?
நினைவூபடுத்துகிறேன் நான்.........


"பாசம், அதிக அக்கறை, குடும்பத்தின் மீது நான் கொண்ட மதிப்பு!! உன் நலனில் நான் கொண்ட அக்கறை.... இன்னும்...... இன்னும்.........",
இது நீ சொன்னது.........


இவ்வளவு இருந்தும் ஏன் என்னை ஒதுக்குகிறாய்? புரியவில்லை........
நான் உன்னை  நேரில் பார்க்கவில்லை என்ற, இல்லை என் மீது உனக்கு நம்பிக்கை வரவில்லை ஆதனால் தானா??,
 

தேடி நீ வந்த உன்
உறவை தொடர விரும்பியதால்,

ஆரம்பம் முதல் உன்னிடம் 
எதையும் மறைக்கவில்லை.
ஆனால் நீ?

காதல் கண்களிலிருந்து ஆரம்பிப்பதில்லை கண்ணே, மனதிலிருந்து ஆரம்பிக்கும், 

உன் மனதை கேட்டுபார் அது சொல்லும் உண்மையை, 



நீ என்னை மறந்து விட்டாயா? நீ என்னை நினைக்கிறியா? ஏன் என்னை மறந்தாய்? உண்மையைச் சொல். ஜீரணிக்க முடியவில்லை கண்ணே.

என் வாழ்க்கையை மாற்றியவளே. இன்றும் மாறியது வாழ்க்கை. வாழ்வதற்கு உற்சாகம் இழந்துவிட்டேன். செயல்பட முடியவில்லை. முயற்சிக்கிறேன் ஒவ்வொரு நிமிடமும்.

நான் வித்தியாசமானவன்,
நானாக உன்னை விரும்பி,
நான் மட்டும் காதலை சொல்லி
நாளை நீ சொல்லுவாய் என்று
நானிருந்தேன் நம்பி........


நீயும் விசித்திரமானவள் தான்
யாரையும் காதலிக்கமாட்டாய் என்று சொல்லிட்டு,
உன் பிறந்தநாள் அன்று வாழ்த்து சொல்ல ‌தொலைபேசியில் வந்த என்னிடம், உன் பள்ளி நண்பன் பிரபுவை காதலிக்கிறேன் என்றும்,  என் நட்பையும் தொடர விரும்புவதாய் சொல்லி 

நிற்கதியாய் விட்டாய் என்னை...........

நினைத்ததைச் செய்து, நிம்மதி கண்ட
அந்த நாட்கள் என்று வருமோ ?

வண்ணக் கனவுகளில் எண்ணம் மறந்து,
சின்னக் குழந்தைகளாய் ஆடிக் கழித்த
அந்த வாழ்க்கை இனி வருமா?

நான் ‌எங்கே தவறு செய்தேன்?  புரியவில்லை,
என்னிடம் ‌என்ன குறை?
தெரியவில்லை,
எத்தனை முறை நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னதற்கு பதில் ஏதும் செல்லாமல் போதனதற்கு அர்த்தம்.........?????

இவ்வளவு நாட்கள் நமது பழக்கம்?????
இது போல் இன்னும் பல வினாக்கள் என் மனதில் விடை தெரியாமல்? எப்படி உனக்கு தெரிவிப்பது,
இந்த கடிதத்தை நீ படிக்கும் போது நான் நானாக இல்லை,
பல மாற்றங்களை என்னுள் ஏற்படுத்திவிட்டு
நீ போய்விட்டாய்,
 

நினைக்கவும் முடியாமல், 
மறக்கவும் முடியாமல்,
நினைவுகளளோடு

நான் படும் பாடு..........





நீ ஏன் வந்தாய்?
ஏன், போனாய்?
இடையில் நடந்தது என்ன?
இது என்ன நவீனயுகத்தின் வித்தியாசமான விளையாட்டா? உன்னிடமிருந்து பதில் எதிர்பார்க்கிறேன்

தொடர்பு கொள்ள வழிதேடி அலைகிறேன் கண்ணே. நீயும் தேடுகிறாயா? உள்ளத்தில் கவலை இவ்வளவு காலம் தங்கியதில்லை கண்ணே. வருடம் 1 கடந்து விட்டது. உன் மனம் எவ்வளவு தூரம் சென்று விட்டது. 
ஒரு முறை பேசடி மனம் விட்டு. 
மறுத்து விடாதே கண்ணே 

உனக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.......
உன் பதில் கடிதம் எதிர்பார்த்து

காதலனாகவும்.......... நண்பனாகவும்.........


இப்படிக்கு,
என்றும் உன் அன்புள்ள,
ஆனந்த

Saturday, June 5, 2010

கடிதம்-3 கவிதையில்

கவி பாட ஆசை தான் - என்
கவியை பாட ஆசைதான்- உன்
கண்களை பார்த்ததில்லை - நான்
கண் இருந்தும் குருடன் தான்


கரும்பின் சுவைபோல் உன்
கனிவான பேச்சை கேட்டு - எத்தனை நாள்
கண் உறங்க மறந்திருப்பேன் - உன்னை
கனவில் நினைத்து மகிழ்ந்திருப்பேன்



கவிஞர் வாலியை போல்
கவிதை பாட
கற்றுக்கொண்டேன் - உன்
கைபேசி மூலம்


உன் பெயர் 
எனக்கு பிடிச்சிருக்க
என் பெயருக்கு பதிலாக

உன் பெயரை
என் பெயரின்

புனை பெயராக மாற்றிக் கொண்ட
கவிபிரியன் நான்.


"மல்லி(கா)கை" என்றதும்
உனக்கும் 

எனக்கும் 
மட்டும் தெரியும் அந்த ‌பொருத்தம்
குப்புசாமிக்கும், 

கோபால்-சாமிக்கும் தெரியவா போகிறது.



என் அரைசாண் இதயத்தின்
அந்தம் வரை தொட்டவளே!
ஆழமான உன் மனதை
ஆக்கிரமித்த நான்- இன்று
ஓரமாய் கிடப்பவன்!


உன் நினைவுகளை வரவேற்க
என் இதயத்தில்
அரண்மனை அமைத்து வைத்திருக்கிறேன்


நீயோ
புதைகுழி தேடிக்கொண்டிருக்கின்றாய்
என் நினைவுகளை புதைப்பதற்கு


உன் மனதை நானும்
என் மனதை நீயும்
உடுத்திக்கொண்டு
என்னில் நீயும்
உன்னில் நானும்
உறைந்துபோன
அந்த நாட்கள்
என் சவப்பெட்டியை கண்டதும் தான்
உன் நினைவுக்கு வருமா?


ஒரு கவிதையின்
கிறுக்கலில் -எல்லாவற்றையும்
கொட்டிவிட இயலாத
உணர்வின் மிகுதியில்
நனைகிறது  என் மனசு.


காதல் கடந்து
வாழ்க்கை கடந்து
இறந்த பாட்டி தாத்தாவிலிருந்து
இறக்கப் போகும் அப்பாம்மா வரை
எண்ணி அழுகிற பலரில்
என்னையும் ஒருவராய் ஏன் நீ ஏற்க மறுக்கிறாய். .




இன்னும் -
என்னென்னவோ வலிகள்
எப்படி சொல்வதென்றே தெரியாமல்
உள்‌ளே கனக்கிறது என் உள்ளம்.


அத்தனையையும்
வெளியில் சொன்னால் -
நான் ஒரு 'பைத்தியம்' என்றுசொல்லும் உலகம்

தனிமை கொன்று வீழ்த்தியும்
யாருடமே பேசுவதில்லை நான்.


உண்மையில் -
எனக்கான கவலையென்ன?

உணவோ
உடையோ
சுகமோ துக்கமோ என்றால் -
பளீரென இல்லை என்று தலையாட்டலாம்.

பிறகென்ன; ஏனிந்த
பிதற்றல் என்கிறாயா............?

என் கவலைகள் மொத்தமும்
நீ - எனில்
ஏற்ப்பியா சொல்?? 

புரிந்துக் கொண்டவர்களுக்குள்
மட்டுமே
புரிந்து கொள்ளப்படுகிற
விசித்திரமானததுதான் நமது 
நட்பு.
உனக்கு புரிந்ததா! என்றால் எனக்கு புரியவில்லை


(தொடரும்)

Wednesday, June 2, 2010

கடிதம்-2


ஆகஸ்ட் மாதம் நமது நட்பின் ஆரம்ப மாதம், நான் உன் காதலில் விழுந்த மாதம்,  யாரேன்றே தெரியாத, முகம் பார்க்காமல் உன் குரல்  கேட்டு வந்த காதல், நீ உன் ‌boy friend க்கு முயற்சி செய்தபோது தவறுதலாக என்னை தொடர்பு கொண்டதாக நீ சொல்லும் போது எனக்கு  தெரியவில்லை நான் உன்னை காதலிக்க போகிறேன் என்று,  நீ விளையாட்டாய் ஆரம்பித்து என் வாழ்க்கையில் நுழைந்துவிட்டாய், உன் நட்பு எனக்கு காதலாய் தெரிந்தது.  உன் அன்பு என்னை பைத்தியமாய் ஆக்கியது.  யாரிடமும் எனக்கு இவ்வளவு அன்பும் பாசமும் வந்ததுகிடையாது.  


உன் கலேஜ் பெயரை நான் கண்டுபிடிச்சு சொன்னதும், நீ  பயந்தது.  நான் மன்னிப்பு கேட்டததும் இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.
I Love You / American Sign Language)

ஒரு வருடம் கூட முடியவில்லை அதற்குள் இவ்வளவு மாற்றமா? :'-(
 
என் பிறந்தாளுக்கு நீ இரவு 12 மணிக்கு வாழ்த்து சொன்னது.  உலகத்தில் எனக்காக ஒருத்தி இருக்கிறானா அது நீதானு இருந்ததேன்.
அன்னிக்கு இரவு உன் பள்ளி நண்பன் பிரபு கூட நீ இரவு முழுக்க பேசிட்டு என் நம்பரை screened பண்ணயே, சத்தியமாக சொல்றேன்  அன்னிக்கு விடிய விடிய தூங்கா‌மா என்ன செய்றதுனு  தெரியாமா, புரியாமா முட்டாளா இருந்தேன்.

இது உன் பிறந்தநாள் பரிசுனு நினைச்சிக்கிட்டேன்.

என்னால் கடைசிவரையில் உன்ன புரிந்துகொள்ள முடியவில்லை! 
நீ நினைப்பது சரி. எல்லோரையும், எல்லாவற்றையும் புரிந்துகொள்ளவேண்டுமென்று அவசியமென்ன இருக்கிறது?

ஆனால், இப்போ எழுதுகிறேன், இது காதல் கடிதமல்ல. என் தன்னிலைவிளக்கம்.

உன்னைக் காதலிக்கத் தொடங்கியபிறகு ஒருநாளில் எத்தனை மணிநேரம் நான் முட்டாளாயிருக்கிறேன் என்பதன் மொத்த தொகுப்பு.

என் காதலின் எடை என்ன என்பதை மில்லிகிராம் சுத்தமாய்ச் சொல்லிவிட முடியாது.

கத்தியால் கைகீறி ரத்தம் காட்டவும் மாட்டேன்.

நேசம்காட்ட அனுமன்போல் நெஞ்சுகிழிக்கவும் மாட்டேன்.

எந்தப் புதுபேனா வாங்கினாலும் என்பெயர் எழுதிப் பார்ப்பதை மறந்து அனிச்சைச் செயலாய் உன்பெயர் எழுதிப் பார்க்கிறேனே! அதுதான் அடையாளம். கவிதைகள் அடையாளம், இந்த கடிதம் அடையாளம்; என் கண்ணீர் அடையாளம்.
 (தொடரும்)...............


Saturday, May 29, 2010

காதல்கதை- ஸ்ரீ

ஸ்ரீ - இது ‌ஒரு நவீன யுகத்தின் மாறுபட்ட மன போராட்ட கதை




என்னுரை
ஏதோ தோன்றிய எண்ணங்களை அப்படியே சேர்த்து தருகிறேன்.  சொல், பொருட்பிழை இருப்பின் மன்னிக்கவும்.

முன்னுரை


நவீன யுகத்தில் முகம் தெரியாத இரு உள்ளங்களுக்குள் ஏற்பட்ட காதல் அனுபவத்தை இக்கதையின் மூலம்  விவரிக்கப்பட்டுள்ளது.


‌செல்பேசிமூலம் அறிமுகம் இல்லாத ‌ஒரு பெண்ணின் எண்ணிலிருந்து வந்த ஒரு குறுச்செய்தி (SMS) தான் இவர்களின் அறிமுகம்.  அதன் பின்னர் அவர்கள் பழகியதை கதையின் நாயகன் ஆனந்த் அவளுக்கு (‌‌‌‌‌ஸ்ரீ) கடிதம் மூலம்  தெரிவிக்கி‌றான்.


காதல் கடிதம்-1




என் அன்புக்குரிய ஸ்ரீ-க்கு,


நான் உன்னை ஒவ்வொரு பொழுதும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன். அதன் விளைவாக தான் வெகு நாட்களாய் எழுத வேண்டும் என்று நான் நினைத்த கடிதமிது. 


நீ முதலில் அனுப்பிய SMS முதல்  இன்று வரை நடந்தவற்றை
அசைபோட்டபடி எழுத நினைத்த கடிதமிது.



உன் முதல் SMS msg சனிக்கிழமை யாரேன்று தெரியாத உன் நம்பரிலிருந்து வந்ததும், ஏதோ இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி,
SMS மூலம் ஒருவரை  மகிழ்ச்சி அடைய வைக்கமுடியும்
என்பதை அப்போதுதான் நான் உணர்ந்தேன்.
 
அன்று பாறையாய் நான். பசுமரமாய் நீ.
வெடிகுன்டுக்கு பிளக்காத பாறை வேருக்கு பிளந்த அதிசயம் என்ன?
வைரமுத்து கேட்டது போல் இதில் யாருக்கு பாராட்டு பத்திரம் வாசிக்க?
பாறைக்குள் புகுந்த வேருக்கா? இல்லை, வேருக்கு நெகிழ்ந்த பாறைக்கா?

"உன் வெட்கமா உன் வேகமா
உன் கிண்டலா உன் கிள்ளலா
உன் துள்ளலா உன்  பார்வையா
உன் அன்புதான் என்னை ஈர்த்ததா?
ஈர்த்ததா ஈர்த்ததா?" என்று ஒரு கவிஞன் கூறியது  தான் என் நினைவுக்கு வருகிறது.
நான் எழுதாவிடினும் எனக்காய் எழுதியதாய் உணர்கிறேன்.

ஒவ்வொரு நாளும் ஏதோ Office க்குபோய் file நடுவில் வாழ்ந்த என்னை. 
உன்னால்தான் மகிழ்ச்சி என்னும் வண்ணத்து பூச்சியின் சிறகுகளை வாசிக்கிறேன்.

தினமும் காலையில் கதிரவனை காண்கிறேனோ இல்லையோ,
உன் காலை வணக்கத்தை என்  Mobile ல பாக்காமல் என்னால் இருக்க முடியாது.

ஒரு நாள் இரவு நீ Record எழுதுறேன் நைட் 12 ஆகும் என்று சொன்னியே
அதுக்கு நானும் உனக்கு துணையாக  தூங்காம இருக்கிறேனு சொன்னதுக்கு
"நீ ரொம்ப நல்லவனா இருக்கிறேயேனு" நீ சொன்ன அந்த பாராட்டு,
எனக்கு ஏதோ உலகமே என்னை பாராட்டிய மாதிரி இருந்துச்சுடா

இரவுகள் முழுவதும் உன் ஞாபக கொசுக்கள்.
புரண்டு புரண்டு படுப்பேன். தூக்கமும் புரண்டு புரண்டு படுக்கும்.
உன்னைக் காண வேண்டும் என மனசு அரிக்கும்.
ஆனால் எப்படி புரியாதபடி எத்தனை இரவுகள்?

(தொடரும்..................................................)