ராங் நம்பராய் நீ என்னிடம் பேச ஆரம்பித்தாய் இன்றுராங்காக நான் போக, ஏன் இப்படி செய்தாய் நீ
நாட்கள் பல தூங்காமல் வளர்த்த காதல் இன்று
நான் மட்டும் தூங்காமல் இருக்க வைத்தாயே, ஏன் இப்படி செய்தாய் நீ.
காதல் வேண்டாம், காதல் வேண்டாம்
கழற்றி விடுவார்கள் என்று எச்சரித்தான் - நண்பன்
காதில் வாங்காமல் காதலித்தேன்- நீயோ
கழற்றி விட்டாய் என்னை உன் மனதிலிருந்து,
ஏன் இப்படி செய்தாய் நீ.
அவள் டைம் பாஸ்க்கு பேசுகிறாள்,
அவளை நம்பாதே என்றான் நண்பன்- என்
ஆவியே பாஸ் ஆகிடும் போலிருக்கு இப்போ,
ஏன் இப்படி செய்தாய் நீ.
பூஸ்டர் காட்டு போட்டு பேசியே நீ -என்னை
பூஸ்டர் குடிக்க மருத்துவமனையில் சேர்த்துவிட்டாய் இன்று,
ஓ........, என் வேல்டிட்டி முடிந்துவிட்டாதா?
ஏன் இப்படி செய்தாய் நீ.
சிரிக்க சிரிக்க பேசிவிட்டு
நீ போய்விட்டாய்,
பலர் என்னை பார்த்து
சிரிக்க சிரிக்க பேசவிட்டு
நீ போய்விட்டாய்,
ஏன் இப்படி செய்தாய் நீ.
சொல்லடி ஏன்னடி ஏன்னடி இப்படி செய்தாய், நீ
ஏன்னடி இப்படி செய்தாய் எனக்கு????
No comments:
Post a Comment