ஆகஸ்ட் மாதம் நமது நட்பின் ஆரம்ப மாதம், நான் உன் காதலில் விழுந்த மாதம், யாரேன்றே தெரியாத, முகம் பார்க்காமல் உன் குரல் கேட்டு வந்த காதல், நீ உன் boy friend க்கு முயற்சி செய்தபோது தவறுதலாக என்னை தொடர்பு கொண்டதாக நீ சொல்லும் போது எனக்கு தெரியவில்லை நான் உன்னை காதலிக்க போகிறேன் என்று, நீ விளையாட்டாய் ஆரம்பித்து என் வாழ்க்கையில் நுழைந்துவிட்டாய், உன் நட்பு எனக்கு காதலாய் தெரிந்தது. உன் அன்பு என்னை பைத்தியமாய் ஆக்கியது. யாரிடமும் எனக்கு இவ்வளவு அன்பும் பாசமும் வந்ததுகிடையாது.
உன் கலேஜ் பெயரை நான் கண்டுபிடிச்சு சொன்னதும், நீ பயந்தது. நான் மன்னிப்பு கேட்டததும் இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.
I Love You / American Sign Language)
ஒரு வருடம் கூட முடியவில்லை அதற்குள் இவ்வளவு மாற்றமா? 
:'-(
என் பிறந்தாளுக்கு நீ இரவு 12 மணிக்கு வாழ்த்து சொன்னது. உலகத்தில் எனக்காக ஒருத்தி இருக்கிறானா அது நீதானு இருந்ததேன்.
அன்னிக்கு இரவு உன் பள்ளி நண்பன் பிரபு கூட நீ இரவு முழுக்க பேசிட்டு என் நம்பரை screened பண்ணயே, சத்தியமாக சொல்றேன் அன்னிக்கு விடிய விடிய தூங்காமா என்ன செய்றதுனு தெரியாமா, புரியாமா முட்டாளா இருந்தேன்.
இது உன் பிறந்தநாள் பரிசுனு நினைச்சிக்கிட்டேன்.
அன்னிக்கு இரவு உன் பள்ளி நண்பன் பிரபு கூட நீ இரவு முழுக்க பேசிட்டு என் நம்பரை screened பண்ணயே, சத்தியமாக சொல்றேன் அன்னிக்கு விடிய விடிய தூங்காமா என்ன செய்றதுனு தெரியாமா, புரியாமா முட்டாளா இருந்தேன்.
இது உன் பிறந்தநாள் பரிசுனு நினைச்சிக்கிட்டேன்.
என்னால் கடைசிவரையில் உன்ன புரிந்துகொள்ள முடியவில்லை!
நீ நினைப்பது சரி. எல்லோரையும், எல்லாவற்றையும் புரிந்துகொள்ளவேண்டுமென்று அவசியமென்ன இருக்கிறது?
ஆனால், இப்போ எழுதுகிறேன், இது காதல் கடிதமல்ல. என் தன்னிலைவிளக்கம்.
உன்னைக் காதலிக்கத் தொடங்கியபிறகு ஒருநாளில் எத்தனை மணிநேரம் நான் முட்டாளாயிருக்கிறேன் என்பதன் மொத்த தொகுப்பு.
என் காதலின் எடை என்ன என்பதை மில்லிகிராம் சுத்தமாய்ச் சொல்லிவிட முடியாது.
எந்தப் புதுபேனா வாங்கினாலும் என்பெயர் எழுதிப் பார்ப்பதை மறந்து அனிச்சைச் செயலாய் உன்பெயர் எழுதிப் பார்க்கிறேனே! அதுதான் அடையாளம். கவிதைகள் அடையாளம், இந்த கடிதம் அடையாளம்; என் கண்ணீர் அடையாளம்.
(தொடரும்)...............
No comments:
Post a Comment